Niroshini / 2017 பெப்ரவரி 05 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்
வியாபார நிலையத்தில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவியை உடைத்தெறிந்து விட்டு கடையில் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று புத்தளம் நகரில் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமையப்பெற்றுள்ள மின்சார உபகரணங்களை விற்பனை செய்யும் வியாபார நிலையத்திலேயே நேற்று சனிக்கிழமை (04) இரவு இச்சம்பவம் இடம்பெற்றவுள்ளது.
குறித்த விற்பனை நிலையம் அமையப்பெற்றுள்ள இடத்துக்கு பின்புறமாக மனித நடமாட்டம் குறைந்த பழைய கொத்துப்பா பள்ளி மைதானம் அமைந்துள்ளது. இந்த பகுதியின் ஊடாகவே திருடன் உள்நுழைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
திருடுவதற்கு உட்புகுந்த திருடன் முதல் கட்டமாக அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவியை சிதைத்து விட்டு தனது கைவரிசையை காட்டியுள்ளான். எனினும், குறித்த இந்த வியாபார நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள வியாபார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் முகத்தை துணியால் மறைத்த ஒருவர் இந்த செயலில் இறங்கியுள்ளமை பதிவாகியுள்ளது.
இதன்போது, வியாபார நிலையத்தில் காணப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களும் இரண்டு இலட்சம் ரூபாய் பணமும் களவாடப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago