Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். இஸட். ஷாஜஹான்
சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிரவுன் சுகர் வகையைச் சேர்ந்த ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்குக் கொண்டுவந்த, கான் அத்தா என்ற பாகிஸ்தான் பிரஜையை (வயது 44) எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல, நேற்று வியாழக்கிழமை (18) உத்தரவிட்டார்.
இந்நபர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, நேற்று வியாழக்கிழமை (18) அதிகாலை 12.20 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரின் பயணப் பொதி சோதனையிடப்பட்டதை அடுத்து, 678 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்தநபர், பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 184 விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.
குறித்த ஹெரொய்னை, பயணப்பையின் கைப்பிடியில் சூட்சுமமாக மறைத்து கொண்டு வந்துள்ளதாக விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹெரோய்ன் போதைப்பொருளை, ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவர் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் இலங்கைக்குச் சென்ற பின்னர் ஆப்கானிஸ்தானுக்குத் தொலைபேசி அழைப்பொன்றை எடுக்குமாறும், அதனையடுத்து சந்திக்க வேண்டிய நபருடன் தொடர்பினை ஏற்படுத்தித் தருவதாகவும் ஆப்கானிஸ்தான் நாட்டவர் கூறியதாகவும், விசாரணைகளின் போது சந்தேகநபர், அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பாகிஸ்தான் பிரஜை, முதன் முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
27 minute ago
33 minute ago