Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு ‘தெபா எல’ வடிகால், நீண்டகாலமாகச் சுத்தம் செய்யப்படாமல் காணப்படுவதால், மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக, பிரதேசவாசிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இது குறித்து, அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“பிரதேசவாசிகளால் ‘திய ஒந்த எல’ என அழைக்கப்படும் ‘தெபா எல’, கடந்த ஒரு வருட காலமாக சுத்தம் செய்யப்படாமை காரணமாக, தண்ணீரில் தாவரங்கள் வளர்ந்து காணப்படும் அதேவேளை, பிளாஸ்டிக் போத்தல்கள், குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக, நுளம்புப் பெருக்கம் அதிகம் உள்ளது.
“நகரில் பல நூற்றுக் கணக்கானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை, டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பியுள்ளது. ஒரு கட்டிலில் இரண்டு நோயாளிகள் தங்கியிருந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று மாத காலத்தில், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில், ஐந்து டெங்கு நோயாளிகள் இறந்துள்ளனர்.
“இந்நிலையில் ‘தெபா எல’ சுத்தம் செய்யப்படாவிட்டால், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
“மேலும், மழை தொடர்ந்து பெய்தால், இந்த வடிகால் ஊடறுத்துச் செல்லும் நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களான ரப்பர் வத்தை, சேனை, தெனியாயவத்தை, செல்ல கந்த, பெரியமுல்ல லாஸரஸ் வீதி, தளுபத்தை, கட்டுவ, குடாபாடுவ உட்பட பல பிரதேசங்களிலும் வசிக்கும் மக்கள், வெள்ள நீரினால் பாதிக்கப்படுவர்” என்றனர்.
மேலும், கடந்த காலங்களில் ‘தெபா எல’ சுத்தம் செய்யப்படாமை காரணமாக, இப்பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியதாகவும், மக்களின் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ‘தெபா எல’வில், பிரதேசவாசிகள் சிலர் குப்பைகளைக் கொட்டுவதாகவும் இந்த ஓடை செல்லும் பகுதியில் சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக மழை பெய்தால் நீர்கொழும்பு நகரின் மேற்குறிப்பிட்ட பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதற்கு முன்னர் ‘தெபா எல’ சுத்தம் செய்ய, நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சகலரதும் கோரிக்கையாகும்.
40 minute ago
45 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
57 minute ago
1 hours ago