2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும்’

Kogilavani   / 2017 ஜனவரி 31 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச கணக்காய்வாளரின் அதிகாரம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்ன, இது தொடர்பான சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், “ஜனாதிபதியும் கணக்காய்வாளரின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தில்தான் இருக்கின்றார். எதிர்க் கட்சியில் இருக்கும் போது சிலர், சில பொறுப்புக்களுக்கு சுயாதீன செயற்பாட்டுக்கான அதிகாரம் இருக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். அவர்கள் தற்பொழுது அதிகாரம் கிடைத்தவுடன், சுயாதீன அதிகாரம் உள்ள நபர்களை விமர்சனம் செய்து வருகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X