2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'உங்களுக்காக அரச சேவை'

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் 'உங்களுக்காக அரச சேவை' என்ற தொனிப்பொருளில் நடத்தப்படும் மாபெரும் நடமாடும் சேவையின் நான்காம் நிகழ்வு, புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை, விவேகானந்தா மேடு, கொழும்பு- 13இல், எதிர்வரும் சனிக்கிழமை 22ஆம் திகதி, காலை 8.30 மணி முதல் மாலை 3.30மணி வரை நடைபெறும்.  

இந்த நடமாடும் சேவையின் மூலம் பின்வரும் அரச சேவைகளை பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்:

1.    பிறப்புச் சான்றிதழினை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல் (ஆங்கிலம்/சிங்களம்/தமிழ்)
2.    பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை (பெயர்/தந்தையின் பெயர்/தாயின் பெயர்/பிறந்த இடம்)  அடையாளம் கண்டு அவற்றைத் திருத்திக் கொடுத்தல்
3.    பிறப்புச் சான்றிதழின் புதிய பிரதியை வழங்குதல்
4.    பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமான சான்றிதழ் வழங்குதல்
5.    தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள்
6.    ஊழியர் சேமலாபநிதித் தொகை விசாரணைகள், கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்
7.    சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவசமாகச் சட்ட உதவி, இழப்பீடு, பிணை, பராமரிப்பு, தொழிலாளர் மோதல், சிறைச்சாலை கைதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி பெறல்
8.    வரிப்பணம், நகர்ப்புற வீட்டு வசதி, வாடகை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு
9.    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு
10.    அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு
11.    ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு
12.    மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்துடன் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X