2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஏற்றுமதி கண்காட்சியில் இணைந்து செயலாற்ற இலங்கை இணக்கம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் 'Astana EXPO-2017'  என்ற மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஆஸ்தானவில் நடைபெறவிருக்கும் இக் கண்காட்சியில், கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பார்வையாளர்கள்  கலந்துக்கொள்ளவுள்ளார்கள். இலங்கையின் ஏற்றுமதி பொருட்களின் மாதிரி மூன்று மாத காலம் வரை காட்சிக்கு வைக்கப்படும்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு 3இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உத்தியோக பூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற கண்காட்சி செயற்பாட்டு ஆணைக்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை  தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தில்  புது டில்லியை தளமாக கொண்டு அமைந்துள்ள கஸகஸ்தான் தூதரகத்தின் இலங்கைக்கான  தூதுவர் புல்லட் சார்சென்பயர் உட்பட இரு நாடுகளினதும் உத்தியோகபூர்வ அதிகாரிளும் கலந்துக்கொண்டனர்.
 
மேற்படி இக்கூட்டத்தில் அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போது  மிக குறைந்த 5 மில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்பு வர்த்தகத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் புதிய வர்த்தகத்தினை ஆரம்பிப்பதற்கு  ஆஸ்தான எக்ஸ்போ 2017 ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக உள்ளது. இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையேயான எதிர்வரும் எக்ஸ்போ 2017 உடன்பாடு எட்டப்பட்டப்பட்ட பின்பு இருநாடுகளினதும் உயர் அந்தஸ்து பெற்ற உத்தியோகபூர்வ அதிகாரிகள் கைச்சாத்திட்டனர்.

தற்போது கஸகஸ்தான்  இலங்கையுடனான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தனது ஆர்வத்தினை முழுமையாக காட்டிவருகிறது. எனவே, கஸகஸ்தான் இலங்கையின் நம்பிக்கைக்குரிய புதிய சந்தைக்கான முதல் நுழைவாயில் என்று இங்கு சுட்டிக்காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இருதரப்பு வர்த்தகத்தினை பொறுத்தவரை மிக குறைந்த 5 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்ட நிலையில், தற்போது கஸகஸ்தான்  இன்னும் சாத்திமான ஒரு கன்னி சந்தையாக உள்ளது என்பதை காட்டுகிறது.

யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் 'Astana EXPO-2017'  என்ற  மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில்  இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஆஸ்தானவில் நடைபெறவிருக்கும் இக் கண்காட்சியில், கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பார்வையாளர்கள்  கலந்துக்கொள்ளவுள்ளார்கள். இலங்கையின் ஏற்றுமதி பொருட்களின் மாதிரி மூன்று மாத காலம் வரை காட்சிக்கு வைக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X