2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொடிகாவத்தைக்கு மஸ்தான் எம்.பி விஜயம்

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வெள்ளத்தனால் பாதிக்கப்பட்டு வெல்லம்பிட்டி, கொடிகாவத்த பிரதேச பாடசாலையில் தங்கியுள்ள மக்களை நேற்று பார்வையிட்டார்.

அவர், இயற்கையின் சீற்றத்தினால் நிர்க்கதியான நிலையில், இடம்பெயர்ந்து வெல்லம்பிட்டி, கொடிகாவத்த பாடசாலையில் தங்கியிருந்த மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு தமது சொந்த செலவில் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான உலர் உணவுப்பொதிகள் மற்றும் அவசர முதலுதவிக்குத் தேவையான மருந்துப்பொருட்களையும் வழங்கிவைத்தார்.

எதிர்பாராத விதமாக மனித நேயத்துடன் தமக்கான உதவிகளை செய்த மஸ்தான் எம்.பிக்கு அம்மக்கள்  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X