2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'குமார் குணரத்தினத்துக்கு நியாயம் பெற்றுக்கொடுங்கள்'

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு 

'உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றவர்கள், மீண்டும் நாட்டுக்கு வருமாறு கோரிக்கை விடுவர். எனினும், ஜனாதிபதியே, நாடு திரும்பிய குமார் குணரத்தினத்தை ஏன் சிறையில் அடைத்தீர்கள்?' என சிறைச்சாலை கைதிகளின் உரிமையைப் பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சேனகபேரேரா கேள்வியெழுப்பினார்.

சமூகம் மற்றும் மதங்கள் மையத்தில் நேற்று புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

'இன்று காலை நாங்கள் சிறைச்சாலை அத்தியட்சகரைச் சந்திப்பதற்காக சென்றிருத்த வேளை எங்களை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரான உதுல் தெனியவிடம் அனுப்பிவைத்தார்கள் அவரிடமிருந்து எமக்குச் சரியான பதிலொன்று கிடைக்கவில்லை. அவர் செய்த ஒரே ஒரு குற்றம் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேற முற்பட்டமையே' எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்தின உரையாற்றுகையில்,

'குடிவரவு குடியகழ்வுச் சட்டவிதி முறைகளை மீறியமையினாலேயே அவருக்கு சிறைத்தண்டனை என்றால் அதே அரசியல் காரணங்களை மையமாக வைத்துக்கொண்டே குடிவரவு குடியகழ்வுச் சட்டவிதிமுறைகளை மீறி விமல் வீரவன்ச நாட்டை விட்டு வெளியேற முற்பட்டார் அவர் அரசியல் தலையீட்டின் காரணமாக விடுதலை செய்யப்படவில்லையா? அவ்வாறெனில் ஏன் குமார் குணரத்தினத்தினத்தையும் அரசியல் தலையீட்டினால் விடுதலை செய்யக் கூடாது?' எனக் கேள்வியெழுப்பினார்.

சிறைச்சாலை கைத்திகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சுதேஷ் சந்திமால் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

'கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் சிலர் அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். அவ்வாறான ஒரு சிறையில் குமார் குணரத்தினத்தை அடைத்து வைத்திருப்பது எவ்விதத்தில் சாதாரணமானது. இவ்வாறான ஒரு கைதி வெலிக்கடை சிறைச்சாலை அல்லது வழக்கு விசாரணை செய்யப்பட்ட நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவது வழமை. அவ்வாறான ஒரு சாதாரண நிலையைக் கூட குமார் குணரத்தினத்துக்கு வழங்கப்படவில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்திடம்  கேட்டுக்கொள்வது, குமார் குணரத்தினத்துக்கு நியாயமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுங்கள் என்றே. இந்நிலையானது எதிர்காலத்தில் குமார் குணரத்தினம் சிறைச்சாலையை விட்டு மீண்டுவந்தாலும் அரசியலில் ஈடுபட முடியாத நிலைக்குக் கொண்டு செல்வதே' எனத்தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X