2025 நவம்பர் 19, புதன்கிழமை

‘குறைகள் இருப்பின் அழையுங்கள்’

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புத்தாண்டு காலப் பகுதியில் விற்கப்படும் விசேட உணவு வகைகள் தொடர்பில் ஏதேனும் குறைபாடுகள்  காணப்படும் பட்சத்தில், 011 - 2635675 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ  அல்லது அருகிலுள்ள சுகாதாரப் பணிமனைக்கோ சென்று, பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்” என்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். 

“தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப் பகுதியில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள உணவகங்களில், சோதனை நடவடிக்கைகள், சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது,  சுத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்கள் இனங்காணப்படும் பட்சத்தில், அவற்றுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டு, அந்த உணவகங்களை மூடிவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X