2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'29,100 கிலோகிராம் மரமஞ்சள் தேவை'

Niroshini   / 2017 ஜனவரி 24 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருடாந்தம், 29 ஆயிரத்து 100 கிலோகிராம் மரமஞ்சள் தேவைப்படுகிறது. அவை, நூற்றுக்கு நூற்று சதவீதம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன' என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திறர எம்.பி கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அமைச்சரின் பதிலையடுத்து குறுக்குக் கேள்வியை எழுப்பிய புத்திக பத்திரண எம்.பி, 'இலங்கையின் மரமஞ்சளுக்கு, இந்தியா, நேர்பாளம் ஆகிய நாடுகளுகளில் நல்ல கேள்வி இருக்கின்றது. ஆகையால், மரமஞ்சளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்' எனக்கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X