Kogilavani / 2017 ஜனவரி 31 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் “தேசிய ஒற்றுமை” எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“காலிமுகத்திடலில் நடைபெறும் பிரதான நிகழ்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறவுள்ளன.
இதன்போது, முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தேசிய மாணவர் படையணியைச் சேர்ந்த 7,882 பேர் கலந்துகொள்ளும் அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மத அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன” எனத் தெரிவித்தார்.
மேலும், “வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கைத் தூதரகங்களிலும் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான பணிப்புரை, வெளிவிவகார அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டங்களில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுகள், மாவட்ட செயலாளர்கள் அல்லது மாகாண பிரதான செயலாளர்கள் தலைமையில் நடைபெறும்” எனவும் குறிப்பிட்டார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago