2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'நல்லாட்சியைக் குழப்ப இடமளிக்கமாட்டோம்'

Princiya Dixci   / 2016 மே 02 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.நிரோஷினி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து நடத்தும் இந்த நல்லாட்சியை குழப்ப எத்தணிக்கும் எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் வெற்றியடையச் செய்து இதே கூட்டணியுடன் 2020ஆம் ஆண்டுக்கான மே தினத்தை நடத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு-கெம்பல்பார்க் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை மீட்டெடுப்பதற்காக அனைவரும் இணைந்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தோம். இன்று நாடு வளமானதொரு பாதையை நோக்கிச் செல்கிறது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பின்பற்றத் தவறிய சிறிமாவோ பண்டார நாயக்கவின் வழிமுறையை பின்பற்றும் ஒரேயொரு தலைமை என்றால் அது பிரதர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் தான்' என்றார்.

இன்று இந்த நல்லாட்சியைக் குழப்ப மஹிந்த தரப்பினர் கங்கனம் கட்டிக்கொண்டு அலைகின்றனர். கிருலப்பனையில் மக்களை இறக்கி நாடகம் ஆடும் கூட்டத்துக்கு, இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

இந்த நாட்டை நல்லதொரு நிலைக்கு கொண்டு செல்லும் வரையில் நாம் எவரும் ஓயமாட்டோம்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X