Kogilavani / 2017 மார்ச் 26 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
"பசில் ராஜபக்ஷவே, எனது அரசியல் வாழ்க்கையைச் சீரழித்தார்" என, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும், "கோட்டாபய ராஜபக்ஷ, என்னுடன் இருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்தார்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா என்னை பசில் ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்ல முயன்றார். அதனை நான் நிராகரித்துவிட்டேன்.
"நான், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களை திட்டியது உண்மையே. அவர்கள் தவறு செய்தார்கள், அதனால் அவர்களை திட்டித்தீர்த்தேன். தவறு செய்தவர்களை திட்டாது, வெள்ளைச் சுண்ணாம்பு பூசவா சொல்கிறீர்கள்?
"பசில் ராஜபக்ஷ, எனது முழு அரசியல் வாழ்க்கையையும் சிக்கலுக்கு உள்ளாகினார். கோட்டாபய ராஜபக்ஷ, என்னோடு இருந்தவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தார். இவ்வாறு கொடுமை புரிந்தவர்களை மஹிந்த ராஜபக்ஷவே காப்பாற்றினார்" என்று தெரிவித்தார்.
இதேவேளை மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வௌ்ளை வான் கடத்தல் சம்பவத்தை முற்றுமுழுதாக அரேங்கேற்றியது ராஜபக்ஷக்களே என்று குறிப்பிட்டார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago