2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Super User   / 2012 மார்ச் 29 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தழிழ்ச்சங்கத்தின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஜூன் 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில்  நடத்தவுள்ளது.

"தமிழ் இலக்கியமும் சமூகமும் - இன்றும் நாளையும்" என்ற தொனிப்பொருளில் இடம்பெறவிருக்கும் இம்மாநாட்டில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் உள்ளிட்ட உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள்இ ஆய்வாளர்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கு சிறுவர் இலக்கியம், புனைகதை, கட்டுரை, ஆவணப்படுத்தல், மொழிபெயர்ப்பு, இலக்கியம்,  விமர்சனம், செவ்விதாக்கம் நிகழ்த்து கலைகள், இலக்கியக் கோட்பாடுகள், பெண்ணியம், இதழியல், இணையமும் வலைப்பதிவுகளும் முதலான விடயங்களில் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

மாநாடு எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி காலை ஒன்பது மணிக்கு ஊர்வலத்துடன் ஆரம்பமாகும். தொடர்து பேராளர் பதிவு, அங்குரார்ப்பண வைபவம் ஆகியவை இடம்பெறும். பங்கு பற்றும் பேராளர்களுக்கு மாநாட்டு இலச்சினை பொறித்த பொதி, கோப்பு, மாநாட்டு மலர், மாநாட்டு வெளியீடுகள் வழங்கப்படுவதோடு மாநாடு நடைபெறும் நான்கு நாட்களும் மதிய போசனம், தேநீர் ஆகியனவும் வழங்கப்படும்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக சென்னை பாரதியார் சங்கமும் கொழும்பு தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் பாரதி விழா இடம்பெறும். மூன்றாம் நான்காம் திகதிகளில் ஆய்வரங்குகள் இடம்பெறும்.

மாநாட்டின் நான்கு நாட்களும் தினமும் மாலை வேளைகளில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். மாநாட்டில் வெளியிடப்படும் மலருக்கு எழுத்தாளர்களிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை  சுய முகவரியிட்ட முத்திரை ஒட்டிய நீண்ட கடித உறை ஒன்றை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு: இலக்கியக்குழுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7/57ஆவது ஒழுங்கை கொழும்பு-06. மின்னஞ்சல் முகவரி: sangamconference2012@gmail.com  தொலைபேசி இலக்கம் +940778956761 விண்ணப்பப் படிவங்களை தமிழ்ச்சங்கத்தின் www.colombotamilsangam.com என்ற இணையத்தளம் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்ப முடிவு திகதி:15-04-2012


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .