2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பட்டதாரி பயிலுனர்கள் 54 பேருக்கு நிரந்தர நியமனம்

Menaka Mookandi   / 2013 மே 10 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


ஒரு வருட காலமாக பயிலுனர்களாக பணியாற்றிய பட்டதாரி பயிலுனர்கள் 54 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

கட்டானை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஸேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கட்டானை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ருவன் பத்திர உட்பட அதிகாரிகள் பலர் பங்குபற்றினர். கட்டானை தேர்தல் தொகுதியில் பட்டதாரி பயிலுனர்களாக பணியாற்றியவர்களே நிரந்தர நியமனக் கடிதம் பெற்றவர்களாவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X