2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இசெட்.ஷாஜஹான்

கந்தானை பொலிஸ் நிலைய சார்ஜன் பிரியந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் குருன்தெனிய ஆகியோரை தாக்கிய சம்பவத்தில் கைதான மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிரந்த அமரசேகர மற்றும் அவரது வாகன சாரதி ருவன் பிரதீப் ஆகியோருக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெலிகம்பிட்டடிய பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருருந்த தேர்தல் சுவரொட்டிகளை  குறித்த  சார்ஜனும் பொலிஸ் கான்ஸ்டபிளும் அகற்றிக்கொண்டிருந்த போது வாகனம் ஒன்றில் வந்த சந்தேக நபர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான  சிரந்த அமரசேகர  மற்றும் அவரது வாகன சாரதி ருவன் பிரதீப்  ஆகியோர்  புதன்கிழமை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X