Super User / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
கடந்த சில தினங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 37 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக இத்திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மெக்ஷி புரொக்டர் கூறினார்.
கொழும்பில் மதுபோதையுடனான சாரதிகள் காரணமாக ஏற்பட்ட இரு விபத்துகள் குறித்த தகவல்களின் பின்னரே இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவின் பணிப்பின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பு வாகனபோக்குவரத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு தலா 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அதேவேளை, பின்விளக்குகள் இல்லாத துவிச்சக்கர வண்டிகள் காரணமாகவும் விபத்துகள் அதிகரித்திருப்பதை பொலிஸ் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக ஒக்டோபர் முதலாம் திகதி விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்..
43 minute ago
1 hours ago
1 hours ago
ஓட்டமாவடி ஜெமீல் Tuesday, 20 September 2011 03:34 AM
அபராதம் மட்டும் போதாது, இவா்களுக்கு சில தினங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்படல் வேண்டும்.
Reply : 0 0
mihwar Tuesday, 20 September 2011 06:58 PM
குடிக்க குடுத்துட்டு அபராதம் வேறையா ????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago