2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 11 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நபர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். சாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடைய இரண்டாவது கணவனே (சித்தப்பா) கைது செய்யப்பட்டவராவார்.

கோங்கொடமுல்ல அக்கரஅத்த பிரதேசத்தை சேர்ந்த தென்னக்கோன் பத்திரனலாகே திலகரட்ன என்பவரே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இதனை அடுத்து தாயார் சந்தேக நபருடன் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமியின் அக்கா (17 வயது) ஒருவரும் தங்கை ஒருவரும் உள்ளனர்.

சந்தேக நபர் சிறுமியின் தாயாருக்கு மது அருந்தக் கொடுத்து விட்டு அவர் போதை ஏறி துங்கியதன் பின்னர் நீண்டகாலமாக காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

119 பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை சந்தேக நபரை பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்த போது சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மெலதிக நீதவான் ரஜீந்ர யு ஜயசூரிய உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X