2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

140 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் - சேய் சிகிச்சை பிரிவு திறப்பு

Super User   / 2012 ஏப்ரல் 24 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா )


நீர்கொழும்பு, குடாப்பாடு பிரதேசத்தில் 140 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட தாய் - சேய் சிகிச்சை பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாரியாரான சட்டத்தரணி புஷ்பா ராஜபக்ஷ தாய் - சேய் சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார்.மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர. மாநகர சபை உறுப்பனர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X