Editorial / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்தில், சட்டவிரோதமான முறையில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம், இன்று (03) தெரிவித்துள்ளது.
இது குறித்து, பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 29, 30ஆம் திகதிகளில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, குறித்த பொலிஸ் நிலையங்களினூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதேபோன்ற சுற்றிவளைப்புகள், எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும் என, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
43 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago
2 hours ago