Super User / 2011 ஜூலை 19 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இளைஞர்களுக்கு புது அனுபவம் பெற்றுக்கொடுக்கும் வகையிலான தேசிய இளைஞர் நாடாளுமன்றம், மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், நாடாளுமன்ற சபை மண்டபத்தின் மாதிரியில் அமைக்கப்பட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
சில வெளிநாடுகளில் செயல்படும் உயர்தரத்திலான இத்தகைய இளைஞர் நாடாளுமன்றம் இலங்கையில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
சர்வதேச இளைஞர் வருடத்தை முன்னிட்டு இலங்கையில் இளைஞர் யுவதிகளின் தலைமைத்துவ திறமைகளை அபிவிருத்தி செய்து சரியான வகையில் அரசியலில் ஈடுபடுத்துவதே இவ் இளைஞர் நாடாளுமன்றத்தின் நோக்கம் ஆகும் என இளைஞர்விவகார, திறன்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின்வழிகாட்டலின் கீழ் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக்க மற்றும் திறந்த பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் சாந்த அபேசிங்க ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக உள்ள இளைஞர் பாராளுமன்ற தேர்தல்கள் கடந்த வருடம் (2010) நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இலங்கையின் 332 பிரதேச சபை பிரிவுகளில் நடைபெற்றன.
இவ் இளைஞர் நாடாளுமன்றத்தின் பூரண உறுப்பினர்களின் எண்ணிக்கை 335 ஆகும். ஒவ்வொரு பிரதேசசபைக்கும் ஒவ்வொரு உறுப்பினர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஒரு ஆதிவாசி யுவதியும், பர்கர், மலே இனங்களைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் இதற்காக தெரிவு செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற முறைமை மற்றும் சம்பிரதாயங்கள் குறித்து இளைஞர்களுக்கு அறிவூட்டல், எதிர்காலத்தில் மிக சிறந்த உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டிய பின் புலத்தை அமைத்தல், நாடாளுமன்ற உறுப்பினரின் கடமைகள் பற்றி இளைஞர் சமுதாயத்திற்கு அறிவூட்டல், மற்றும் இளைஞர் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானங்களைப்பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்தல் போன்றவற்றை இவ் இளைஞர் நாடாளுமன்றம் எதிர்பார்க்கிறது.


45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago