Super User / 2011 ஜூலை 25 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுபிட்டியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து இலங்கை இளைஞர் ஒருவர் தனது முகத்தில் துப்பியதுடன் தன்னை அவமதித்ததாக அமெரிக்க யுவதியொருவர் கொள்ளுபிட்டி பொலிஸில் புகார் செய்துள்ளார்.
மாணவியான தான், சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்ததாகவும் மேற்படி இளைஞர் சுமார் 25 வயதானவராக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு கமெரா மூலம் சந்தேக நபரை தாம் இனங்கண்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவிடம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஜூலை 28 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். (லக்மால் சூரியகொட)
40 minute ago
1 hours ago
1 hours ago
bzukmar Tuesday, 26 July 2011 01:29 AM
புஷ்ஷிற்கு ஈராக்கில் சப்பாத்து அபிசேகம் ,மாணவிக்கு துப்பல் அபிசேகமா? பாவம் அமெரிக்க மாணவி.
Reply : 0 0
ஜெமீல் சேர் Tuesday, 26 July 2011 02:00 AM
எமது நாட்டின் கலாசாரம் இதுதான் என்று பிற நாட்டவர்க்கு பிழையாகப் போதிக்கும் அயோக்கியப் பேர்வழிகள் இவர்கள்.
Reply : 0 0
ruban Tuesday, 26 July 2011 04:33 AM
இது சிரி லங்கா அப்ப துப்ப தான் செய்வாங்க.
Reply : 0 0
aj Tuesday, 26 July 2011 04:57 AM
அமெரிக்கா அரசுக்கு எதிராக செய்த நடவடிக்கையா இருக்கலாம்.
எப்படி எல்லாம் தங்களுடைய எதிர்ப்பை காட்டுறாங்க.வாழ்க லங்கா.
Reply : 0 0
MIYAD Tuesday, 26 July 2011 09:20 PM
இது உலகநாட்டில் அமெரிக்காவுக்கு கிடைக்கும் மரியாதையை காட்டுகின்றது.
Reply : 0 0
xlntgson Tuesday, 26 July 2011 09:29 PM
துப்புவது நாகரிகமா, மாற்று காசு இல்லைஎன்று முகத்தில் துப்பிய நடத்துனர் போன்று- சமுதாயத்தில் தனது வெறுப்பைக் காட்ட துப்ப தொடங்கி விட்டனர் போலும்- இவர் முகத்தில் திருப்பி துப்புவதைத் தவிர வேறு பரிகாரம் எனக்கென்றால் தோன்றவில்லை- பழிக்குப் பழி இரத்தத்துக்கு இரத்தம் கண்ணுக்கு கண் கொள்கைக்கு பெரும் ஆதரவில்லை என்றாலும் துப்பலுக்கு துப்பல் சரி என்று யாரும் கூறுவர். அப்படி அல்லாமல் வேறு எதைச் செய்தாலும் பாதிக்கப் பட்டவர் மனம் எவ்வாறு துன்புற்றது என்பதை யாரும் அறிவரோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago