Super User / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

(காந்த்ய சேனநாயக்க)
காலிவீதியில் ஒருவழிப்பாதையாகவுள்ள பகுதியின் ஒரு புறத்தை (லேன்) பொதுபோக்குவரத்து வாகனங்கள் இருவழி போக்குவரத்துக்கும் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக போக்குவரத்து அமைச்சுடன் சந்திப்பொன்றுக்கு அனுமதி கோரியுள்ளதாக இலங்;கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலி வீதியில் தற்போது அமுலிலுள்ள ஒருவழி போக்குவரத்துத் திட்டம் காரணமாக பஸ் தரிப்பிடங்களை கண்டறிவதற்கு பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.
பயணியொருவர் 400 மீற்றர் தூரம் நடந்தபின் பஸ் தரிப்பிடமொன்றை கண்டறியவேண்டும். எனினும் இப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.
உலகில் பொது போக்குவரத்துச் சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் எனவே காலி வீதியில் தற்போது ஒருவழி போக்குவரத்து அமுல்படுத்தப்படும் பகுதியில், ஒரு புறத்தில் பொதுபோக்குவரத்து வாகனங்கள் இருவழிப்போக்குவரத்து மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago