Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிள்ளைகளைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி இளைய சகோதரியிடம் 10 இலட்சம் ரூபாவைக் கப்பமாகக் கோரிய மூத்த சகோதரியும் அவரது கணவரும் கொட்டாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தலுக்கு உள்ளான சகோதரி, இது தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொட்டாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தளை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி இளைய சகோதரியின் கணவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையிலேயே அவரின் அக்காவும் அவரது கணவரும் இணைந்து இந்த கப்பம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் 10 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகக் கோரியுள்ள சந்தேகநபர்கள், பின்னர் அதனை 6 இலட்சம் வரை குறைத்துள்ளனர். இந்நிலையிலேயே பொலிஸார் அவர்களைச் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உரிய விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
38 minute ago
46 minute ago
51 minute ago
meenavan Friday, 19 August 2011 07:58 PM
அப்பப்பா இதுவல்லவோ சகோதரபாசம்? மானுடம் எங்கே செல்கிறது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
46 minute ago
51 minute ago