Super User / 2011 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
தெஹிவளை – கல்கிஸை மாநகரசபைத் தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் மேயர் பதவிக்கான வேட்பாளராக புதிய இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன போட்டியிடவுள்ளார்.
இதேவேளை, கடந்த தடவை கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற, கண்ணாடி குழு உறுப்பினர்கள் பலரும் இம்முறை தமது அணியில் போட்டியிடவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி. ந. குமரகுருபரன் தெரிவித்தார். வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் நாட்களில் பூர்த்தியாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் தமது பிரசாரங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தார்மீக ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்குவது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என த.தே.கூட்டமைப்பு பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
11 minute ago
40 minute ago
52 minute ago
1 hours ago
Nirmalalraj Monday, 22 August 2011 07:08 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
xlntgson Monday, 22 August 2011 09:13 PM
Nirmalalraj வாழ்த்துகள் எதற்கு முற்கூட்டியே தோல்வியை சகித்துக் கொள்ளவா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
52 minute ago
1 hours ago