Super User / 2011 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் அநாதை விடுதி உரிமையாளர் ஒருவரை ஆகஸ்ட் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.
ஜா-எலயிலுள்ள இந்த அநாதை விடுதியிலிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன்பின் ராகமயை வதிவிடமாகக் கொண்ட ரொட்னி பெரேரா எனும் இந்நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டால் சாட்சிகளுக்கு அவர் இடையூறு விளைவிபப்hர் என நீதிமன்றில் பொலிஸார்; தெரிவித்தனர். அந்த அநாதை விடுதியின் நான்கு உத்தியோகஸ்தர்களிடம் இது தொடர்பாக வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் மேலும் விசாரணைகளைத் தொடர்வதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் சந்தேக நபரை ஆகஸ்ட் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
13 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
2 hours ago