Super User / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
ஐ.தே.க. பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் ஐ.தே.க. கீழ்மட்ட அங்கத்தவர்கள் சிலர், கொழும்பு மாநாகர சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடுவதற்கு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான விஜித கதிரகொன்ன இதுதொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையில், தமது குழுவினர் ஐ.தே.கவின் பட்டியலில் போட்டியிடுவதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவரின் நடவடிக்கை காரணமாக அனுமதிக்கப்படாத நிலையில், தேயிலைச்செடி சின்னத்தில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கூறினார்.
தமது குழுவினர் ரனசிங்க பிரேமதாஸவின் விசுவாசிகள் என கட்சித்தலைவருக்கு கட்சியின் அங்கத்தவர்கள் சிலர் தெரிவித்ததன் காரணமாக இக்குழுவினரின் பெயர்கள் சிபாரிசுசெய்யப்படவில்லை எனவும் விஜித கதிரகொன்ன கூறினார்.
தமது குழுவினர் தொடர்ந்தும் ஐ.தே.க.வில் அங்கம் வகிப்பர் எனவம் எதிர்காலத்தில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுவர் எனவும் அவர் தெரிவித்தார். தாம் ஒதுக்கப்பட்டாலும் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை எனவும் தனக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்படவிடவிருந்த போதிலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் கட்சியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தான் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நேற்று கிரான்ட்பாஸில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, கட்சியின் பிளவுகளால் வாக்காளர்கள் ஏமாற்றமடைந்துவிடக்கூடாது எனவும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளர்களைக் கோரியமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago