Super User / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தமித் விக்கிரமசேகர)
மேல் மாகாணத்தை தேர்தல் சுவரொட்டிகள், அலங்காரங்கள், பதாகைகள் இல்லாத பிராந்தியமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் இந்த உத்தரவுகளை மீறுவோரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்ககப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.
கொழும்பையும் அதன் புறநகர்களையும் அழகுபடுத்தும் திட்டத்திற்கிணங்க, இப்பிராந்தியத்தை தூய்மையாக வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க, தமிழ் மிரரின் சகோதர ஆங்கில வார இதழான சண்டே டைம்ஸுக்கு தெரிவித்துள்ளார்.
"சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவது மாத்திரமல்லாமல், சுவரொட்டிகளை ஒட்டுவோர் ,பதாகைகளை நிர்மாணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்வோம்" என அவர் கூறினார்.
அதேவேளை, வாகனத்தின் சாரதிக்கு பின்புற வீதியை மறைக்கும் வகையில் வாகனங்களின் பின்புறத்தில் தேர்தல் ஸ்டிக்கர்களை ஒட்டுவோர், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக தண்டிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
நகரை தூய்மையாக வைத்திருப்பதையும் இரவு நேரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்படாதிருப்பதையும் உறுதிப்படுத்துவதற்காக கூடுதலான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்க கூறினார்.
இதேவேளை, தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுவதை தவிர்ப்பதன் மூலம் நகரை தூய்யைமாக வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு; மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின அனைவருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
சுவரொட்டிகளை ஒட்டுவோர் விடயத்தில் கண்டிப்பாக நடந்துகொள்ளுமாறு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்புச் செயலர் உத்தரவிட்டுள்ளதாக ஐ.ம.சு.கூட்டமைப்பு பொதுச்செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.
"பொதுவாக நாம் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பெருந்தொகை பணத்தை செலவிடுவோம். இம்முறை சுவரொட்டிகள் முதலானவற்றை ஒட்டுவதை தடுப்பதற்கு முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொள்கின்றோம்" என அவர் கூறினார். "நகரை தூய்மையாக வைத்திருக்கும் இத்திட்டத்திற்கு ஏனைய கட்சிகளும் ஒத்துழைக்கும் என நம்புகிறோம்" என அவர் கூறினார். (சண்டே டைம்ஸ்)
5 minute ago
34 minute ago
46 minute ago
54 minute ago
Riyas Monday, 05 September 2011 03:33 AM
அது என்ன கொழும்பில் மட்டும்? எல்லா இடத்திலும் அமுலாக்குங்கள்.
Reply : 0 0
Manithan Monday, 05 September 2011 03:43 AM
தோல்வி உறுதியாகி விட்டால் இப்படித்தான் ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
46 minute ago
54 minute ago