Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக் காடுகளிலே மான்கள் அருகி வரும்போது கொழும்பு மாவட்டத்திலுள்ள சில ஊர்களில் மான்கள் கூட்டமாக திரிகின்றனவென்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இது உண்மை.
அத்துறுகிரிய, பனாகொட, முல்லேகம, கபறக்கட ஆகிய பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டங்கூட்டமாக திரிகின்றன.
இரண்டு மான்களை செல்லப் பிராணிகளாக வளர்த்த ஒருவர், வேறிடம் வாழச் சென்றபோது தனது காணிக்கு அருகிலிருந்த பற்றைக்காட்டினுள் அவற்றை விட்டுச் சென்றார். அவை பெருகி பெரும் கூட்டமாகிவிட்டதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்தனர்.
இவை தற்போது பயிர்களை அழிக்குமளவுக்கு பெருகிவிட்டன. இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து தேசிய பூங்காக்களில் விடுவதற்கான ஒழுங்குகளை செய்வதாக கமநல மற்றும் வனவிலங்கு சேவைகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
தொல்லை தரும் நிலையிலும் மான்களை பாதுகாத்து வரும் மக்களை பாராட்டலாம் அல்லவா!
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago