Super User / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இலங்கைக்கான விஜயம் மேற்கொண்ட உலக புகழ் பெற்ற ஈரானிய ஓவியரும் எழுத்தணி கலைஞருமான குலாம்ரெஸா ரெஹ்பேமா தனது ஒவியங்களில் சிறந்ததொன்றை கொழும்பிலுள்ள தேசிய நூதனசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் கலாசார பிரிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய நூதனசாலையின் பணிப்பாளர் விக்கரமசிங்கவிடம் குலாம்ரெஸா ரெஹ்பேமா ஒவியத்தை கையளித்துள்ளார்.
இந்த ஒவியம் தற்போது தேசிய நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் கலாசார பிரிவு ஏற்பாடு செய்த குர்ஆனிய கலை மற்றும் எழுத்தணி கலை தொடர்பான கண்காட்சியில் குலாம்ரெஸா ரெஹ்பேமாவின் ஒவியங்களே காட்சிப்படுத்தப்பட்டன.


13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago