Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் தமிழ் மக்களுக்கு அரசியல் தேவை இல்லை. ஆனால் அபிவிருத்தி பற்றித்தான் சிந்திக்கவேண்டும் என்று தேர்தலுக்கு முளைத்த சில ஐ.ம.சு.மு. காரரும் ஐ.தே.க காரரும் கூறி வருவதை ஊடகங்கள் வாயிலாக கண்ணுற்றோம்.; இவர்கள் கூறுவது முற்றிலும் தவறு.; அரசியல் அனுபவமே இல்லாத கற்றுக்குட்டிகள். இதுவரை அரசியலே செய்திராத சிந்தனைத் தெளிவில்லாத இவர்களின் கருத்தாகும் என ஜ.ம.மு. பொதுச்செயலாளர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இவர்களெல்லாம் தேர்தல் முடிய அவர்களது மழைக்கால ''விடுமுறை அரசியலை'' விட்டு ஓடி விடுவார்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். வரலாற்றை பாருங்கள். இப்படியானவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதில்லை.; ஆதலினக்ல்த்தான் இன்னமும் ஜனநாயக மக்கள் முன்னணியினர் ஆகிய நாங்கள் ஜ.ம.மு. தலைவர் மனோகணேசனும் அரசியலில் நிலைத்து நிற்கின்றோம். தேர்தல்களில் வெற்றியோ தோல்வியோ. தமிழ் மக்களுக்கான எமது அரசியற் பயணம் தொடரும். தொடர்கிறது.; நாமும் ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசனும் தமிழ் மக்களுடனேயே இருக்கின்றோம். இருப்போம்.
இது எமது தமிழ் மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
எமது தமிழ் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து பன்னெடுங்காலம் பணியாற்றியவர்களுக்கும் அபிவிருத்தி பற்றி அரசியல் கற்றுக்குட்டிகள் கற்பிக்க பார்க்கிறார்கள் . தலைநகரில் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை எமது பிரதிநிதிகள் அவிசாவளை வரை செய்து காட்டியிருக்கிறார்கள். எமது பணி தொடரும். நிலைத்துநிற்கின்றோம்.
இவர்கள் சொல்வதுபோல் ஆளும் ஐ.ம.சு.மு. கட்சியை ஆதரிப்பதன் மூலம் தலைநகர் வாழ் தமிழ் மக்கள் மீது இன்னமும் தொடரும் மர்ம கிரீஸ் மனிதர்களின் தாக்குதலை அப்படியான ஒன்றும் இடம்பெறவில்லை. அப்பாவிகளை இராணுவம் தாக்கியது. காலை உடைத்தது சரி தான் போன்ற இன்னும் பல்வேறு அரசின் நிலைப்பாடுகளை தலைநகர் தமிழர்களும் அங்கீகரித்ததாக அமையும் அரசினால் உலகிற்கு எடுத்துச் சொல்லப்படும்.; இதற்கு நீங்களும் காரணமாக அமையலாமா மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இதற்கு இடமளிக்க முடியாது . இந்த மலிந்த அரசியலை புரிந்து கொள்ளமுடியாத தேர்தல் கால புற்றீசல், மழை ஈசல் போன்ற வேட்பாளர்கள் இவர்கள்.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினர் ஆகிய நாம் கடந்த மாநகரசபையிலும் எமது கட்சியிலேயே ஏணிச் சின்னத்தில் போட்டியிட்டு நான்கு பிரதிநிதிகளை வெற்றி பெற்று நல்ல பணியாற்றி உள்ளோம் நீண்டகால அரசியலும் அபிவிருத்தியும் செய்த எம்மீது தமிழ் மக்கள் நிறையவே நம்பிக்கை வைத்துள்ளனர். யு.என்.பி பட்டியலிலும் சரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலிலும் சரி தமிழ் மக்களால் தமிழ் அரசியலாளர் என அறியப்படும் அல்லது ஏற்கனவே இன்பத்திலும் துன்பத்திலும் தமிழ் மக்களோடு இணைந்த குரல் கொடுத்த அரசியல் அனுபவமும் துணிவும் ஆற்றலும் உள்ளவர்கள் இல்லை;.
எனவே தலைநகரிலும் தெகிவளையிலும் கல்கிசையிலும் தமிழ் மக்களின் ஒரே அமைப்பான ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஒரே தெரிவுக்குரிய வெற்றிக்குரியவர்களைக் கொண்டது. மனோகணேசனும் வேலணை கங்கைவேணியனும் கொழும்பு தமிழ்ச்சங்கம் பாஸ்கராவும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் லயன் கே.டி.குருசாமி பொறியியலாளர் லயன் குகவரதனும் டாப் ஸ்டீல் மனோ ஒல்ட் மோர் ஸ்ட்ரீட் கணேஷ் மற்றும் அனைவரும் உங்கள் நம்பிக்கைக்குரியவர்கள். அதேபோல் தெஹிவளையில் சிங்களரானாலும் தமிழருக்காக குரல் கொடுத்துவரும் முனைவர் விக்கிரமபாஹுவும் மூத்த இடதுசாரி திருவும் உளவியல் உசாத்துணை ஆலோசகர் நந்தினியும் சீலன் கதிர்காமரும் மற்றும் அனைவரும் தமிழ் மக்களின் நம்பிக்ககுரியவர்கள்;. எனவே தான் தமிழ் மக்களுக்கிருக்கக்கூடிய ஒரே தெரிவு ஜனநாயக மக்கள் முன்னணியும் ஏணி சின்னமுமே தமிழ் மக்களுக்கு சேவையாற்ற ஜனாயக மக்கள் முன்னணி ஒன்றே போதும் என்று கூறுகின்றேன். எமது வெற்றி தமிழ் மக்களின் வெற்றி.
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
xlntgson Friday, 16 September 2011 10:00 PM
மாநகர சபை அரசியல் அவ்வளவு முக்கியம் என்றால் தேர்தல் முடிந்து எதிர்க்கட்சியில் வென்றவர்கள் அரசின் பக்கம் போய்விட்டால் என்ன செய்வீர்கள்? பாராளுமன்றத்துக்குத் தேர்வானவர்களே, treasury benches பணம் இருக்கும் பக்கம் போய்விட்டார்கள்! என்ன செய்ய முடிந்தது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago