Super User / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜயந்த சமரகோன்)
கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாஸாவில் விபசார நிலையமொன்றை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரோஸ்மேரி பெலிசியா பெரேரா (மெடம் ஜீனா) வெலிக்கடை சிறையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் அவருக்கு ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டிருந்ததை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்த அவர் களுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைகள் பெண்கள் பிரிவில் கடந்த சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதியை பார்வையிடச் சென்ற சிறைச்சாலை உயர் அதிகாரியொருவரே மெடம் ஜீனாவுக்கு ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மெடம் ஜீனா நேற்று திங்கட்கிழமை களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியிடமும் மேற்படி உயரதிகாரி இது குறித்து விசாரித்துள்ளார்.
12 minute ago
1 hours ago
deen Tuesday, 27 September 2011 10:25 PM
நாடு நல்லா முன்னுக்கு வரும் நல்லம்யய்யா......
Reply : 0 0
IFHAM Wednesday, 28 September 2011 01:43 AM
கெட்டவங்கட உலகம்தானே இது.
Reply : 0 0
reemco Wednesday, 28 September 2011 02:47 AM
யார் இந்த ஜீனா? மேடம் என்று கூறுவதற்கான காரணம் என்ன?
Reply : 0 0
Akkaraipattu Wednesday, 28 September 2011 05:13 AM
குடுத்து வெச்ச மனுசி ...அங்கயும் உல்லாசம் தான்..... ....
Reply : 0 0
samhoon Wednesday, 28 September 2011 06:46 PM
medam சினா
Reply : 0 0
bzukmar Wednesday, 28 September 2011 07:59 PM
மேடம் ஜினா அரசியல் செல்வாக்கு உடையவரோ? சிறையிலும் அதி சொகுசு சும்மா கிடைக்காது.
Reply : 0 0
xlntgson Wednesday, 28 September 2011 08:29 PM
உல்லாசம் இவர் பெற்றாரா, கொடுத்தாரா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago