Super User / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
களனி பிரதேசத்தில் பிச்சைக்காரர் ஒருவர் இனந்தெரியாத குழுவொன்றினால் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 3 மாத காலத்தில் பிச்சைக்காரர்கள் இதே பாணியில் கொல்லப்பட்ட 8 ஆவது சம்பவம் இதுவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் கடுமையான காயங்களுடன் சடலம் காணப்பட்டதாகவும் இக்கொலைக்கான நோக்கம் தெரியவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் மெக்ஷி புரொக்டர் தெரிவித்துள்ளார்.
இப்பிச்சைக்காரர்களை பயன்படுத்தி பணம் சம்பாதித்த குழுவொன்றினால் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பிச்சைக்கார்கள் குறிப்பி;ட்ட இலக்கை அடையத் தவறும்போது, அவர்கள் மேற்படி குழுவினால் காயப்படுத்தப்படுவதாக அல்லது கொல்லப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலத்தில் தலையில் காயங்களுடன் 7 பிச்சைக்கார்களின் சடலங்களை நகர்ப்புறங்களில் பொலிஸார் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.
களனி சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை நடத்தவுள்ளார். களனி பொலிஸார் இக்கொலை குறித்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
7 minute ago
19 minute ago
27 minute ago
32 minute ago
neethan Wednesday, 05 October 2011 07:09 PM
களனி ராசாவுக்கு தெரியாமலா நடந்துள்ளது? பொது மகனுக்கு சுதந்திரம் இல்லை. இப்போது அது பிச்சைகாரர்களுக்கும் இல்லாமலாகிவிட்டது.
Reply : 0 0
ibnu aboo Thursday, 06 October 2011 02:14 AM
இது நாடோடி தமிழ் திரைப்படத்தின் தழுவல் கதைபோலுள்ளது. பிச்சைகாரர்களை வைத்து பிழைப்பு சாம்ராஜ்யம் நடத்துகிறார் வில்லன் நம்பியார். இங்கே அந்த நம்பியார் யாரோ?
Reply : 0 0
sb Thursday, 06 October 2011 03:59 AM
கொன்றவன் மகா பிச்சைக் காரன் போல, பிச்சை எடுத்த பணத்தை பறிக்க கொன்றிருப்பானோ.....!
Reply : 0 0
sb Thursday, 06 October 2011 04:03 AM
மிருக வதை பற்றி வீராவேசம் பேசுறவங்க எங்கயோ??? இதை தடுக்க அவங்களால இன்னுமே முடியலையா???
Reply : 0 0
xlntgson Thursday, 06 October 2011 10:02 PM
கண்ணில்லாப் பிச்சைக்காரனிடம் கொள்ளை அடிப்பவன் கண்கள் உள்ளவன், ஏனடா இப்படி செய்தாய் என்றால் அவன் 'விழிப்பான்' வேறென்ன சொல்வான்? இளைத்த இரும்பை கண்டால் கொல்லன் தூக்கி தூக்கி அடிப்பான் நிற்க இவர்கள் பாவம் புண்ணியத்தை நம்பினால் தானே, ஏழைகளுக்கு வரி போடக்கூடாது என்று எல்லாரும் ஏற்றுக்கொண்டு தான் இருக்கின்றனர், கொள்கை அளவில்! ஓமோம் கொள்கை அளவில் மட்டும் தான் இதில் கட்சி பேதம் இல்லை பிடிபட்டால் அவனுக்கு மரண தண்டனையா கிடைக்கும் மந்தபுத்தி kumarip pengalai கூட்டாக கெடுக்கின்ற கோழைகளுக்கு என்ன தண்டனை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
27 minute ago
32 minute ago