Super User / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
நாட்டின் போக்குவரத்துறை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் கொழும்பு நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் இரு புதிய ஆடம்பர பஸ்களை இரு வாரங்களில் சேவையில் அறிமுகப்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையால் பயன்படுத்தப்படும் பஸ்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பஸ்கள் 30 வருடங்களுக்கு மேல் இயங்குவதாகவும் அவை மாற்றப்பட வேண்டும் எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கூறினார்.
சக்கர நாற்காலிகளை பயன்படுத்தக்கூடிய குறைந்த உயரத்திலான தரைப்பகுதியைக் கொண்ட இரு அசோக் லேலண்ட் பஸ்கள் மொரட்டுவை –புறக்கோட்டை வீதியில் இயங்கவுள்ளதாகவும் அடுத்த வருடம் இத்தகைய மேலும் 100 பஸ்கள் சேவையில் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த பஸ்களுக்கான கட்டணம் சாதாரண பஸ் கட்டணங்களை 3 மடங்காக இருக்கும்.
15 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த பஸ்களின் அடிப்பகுதியின் உயரத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால் வயோதிபர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயன்படுத்தக்கூடிய வகையிலானதாக இருக்கும் என லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரி உமேஷ் கௌதம் கூறினார்.
இந்த பஸ்கள் பஸ் உரிமையாளர்களால் இயக்கப்பட்டாலும் அவற்றின் பராமரிப்புச் செலவு லங்கா அசோக் லேலண்ட் கம்பனியால் பொறுப்பேற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago