Super User / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை அப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் முன்னாள் பொதுஜன ஐக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட மூவர் உயிரிழந்ததுடன் கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முல்லேரியா பகுதியில் பதற்றநிலையை தணிப்பதற்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago