A.P.Mathan / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 101,920 வாக்குகளுடன் 24 ஆசனங்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. எனினும் அக்கட்சி 53 ஆசனங்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் அறுதிப்பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 77,089 வாக்குகளுடன் 16 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி 26,229 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9,979 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், ஜனநாயக ஐக்கிய முன்னணி 7,830 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. அத்தொடு, 2ஆம் இலக்க சுயேட்சைக் குழு 4085 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் ஜே.வி.பி. 3162 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் 1ஆம் இலக்க சுயேட்சைக் குழு 2962 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளன.
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago
Aslam Sunday, 09 October 2011 04:18 PM
கொழும்பு maanahara சபையின் ஆட்சி யார் கையில்?
Reply : 0 0
meenavan Sunday, 09 October 2011 05:27 PM
எல்லா உள்ளூராட்சி சபைகளை தோற்றாலும் தலைநகரை கைப்பற்றியதன் மூலம், தனது தலைமை பதவி அச்றுத்தலை சற்று பின்னாக்கியுல்லதை நினைத்து ரணில் மகிழ்ச்சி அடைவார்.
Reply : 0 0
xlntgson Sunday, 09 October 2011 08:30 PM
வாக்கு பிரிகின்றது என்று முசம்மில் கவலைப் பட்டபோதே கூறினேன், அதுவே அவருக்கு வாய்ப்பாக அமையும் என்று!
மாநகர சபை அதிகாரம் மாகாண சபைக்கு உட்பட்டது, சிறிய காரணங்களுக்குக் கூட சபையைக் கலைத்து விட இயலும்.
கட்சி தாவலும் கூட சகஜம். சிறந்த முறையில் செயல் பட மாகாண & மைய அரசு ஆதரவு தேவை. என்றாலும் மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. சுயேட்சைகள் இருவர் வெற்றி பெற்றிருப்பதும் அவர்களுக்கு சபையை அமைக்க உதவுவதிலும் நீடித்த தன்மை இருக்குமா, கலையுமா பதவிக் காலத்துக்கு முன்னே? வெற்றி அவர் எதிர்பார்த்த படி, மனோவுக்கோ?
Reply : 0 0
Hari Monday, 10 October 2011 05:57 AM
அரசு என்னதான் சகல பலம் கொண்டு தேர்தலை நடத்தினாலும் கொழும்பு மக்கள் அரசுக்கு ஒரு சவாலை விடுத்துள்ளார்கள். நாட்டின் எந்தபகுதியிலும் தேர்தல் யுத்தம்இ அபிவிருத்திஇ பௌத்த மதம் என்ற ஒரு மமதையில் நடைபெற்றது. ஆனால்இ வாழக்க்கைச் செலவு என்பதும் அரசின் வேலைகளுக்கு கணக்கு கேட்பது போலான ஒரு நிலைமையே உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்முனையில் அரசின் முக்கிய அமைச்சர் உட்பட அமைச்சர்கள் பலர், மாகாண முதலமைச்சர், அங்கத்தவர்கள் பிரச்சாரம் செய்தும் அம்மக்களும் அரசுக்கு ஒரு செய்திய சொல்லியிருக்கிறார்கள். நல்ல சவால்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago