Super User / 2011 நவம்பர் 15 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)
பிரபல சினிமா, தொலைக்காட்சி தயாரிப்பாளரும் வர்த்தகருமான உபுல் ஜயசிங்கவின் தயாரிப்பில் திரைக்கு வரவுள்ள 'ஏத்துமாய் மேத்துமாய்' சிங்கள திரைப்படம் கொலன்னாவ சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டதாக என அவரிடம் இனந்தெரியாத நபர்கள் இருவர் விசாரித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் டெய்லி மிரருக்கு கூறுகையில், துனது தனது ஜீப்பை பன்னிபிட்டிய வீதயில் நிறுத்திவிட்டு பத்திரிகைகளை வாசித்துக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் இத்திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.
'கொலன்னாவ சம்பவத்திற்கும் இத்திரைப்படத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை எனவும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது எனவும் நான் கூறினேன். அவர்கள் மோட்டார் சைக்கிள்களை எனது ஜீப்பின் பின்னால் நிறுத்தினர். அவர்களில் ஒருவர் இத்திரைப்படம் குறித்து விசாரித்தார்.
திரைப்படத்தை பார்த்த பின்னர் தேவையானால் மீண்டும் வருவோம் என கூறினார்கள். அவர்கள் பெரும்பாலும் கொட்டாவையிலுள்ள எனது வீட்டிலிருந்து என்னை பின்தொடர்ந்திருக்க வேண்டும்' என்றார்.
இச்சம்பவம் குறித்து தான் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்துவின் பணிப்புரையின் கீழ் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago
KD Wednesday, 16 November 2011 02:42 AM
ஐயோ நல்லதாப் போச்சு..
ஏழாம் அறிவுத் திரைப்படத்தைப் போட்டார் சைக்கிள் நபர்கள் பார்க்கவில்லை
பார்த்திருந்தால் ஈழத்தமிழ் உணர்வாளர் இயக்குநர் முருகதாசிடம் விமானத்தில் இந்திய சென்று விசாரணை செய்திருப்பார்கள்.
Reply : 0 0
vaasahan Thursday, 17 November 2011 12:36 AM
என்ன நடக்கிறது நமது இரட்சிக்கப்பட்ட மண்ணில்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago