2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன உகண்டா பயணம்

Super User   / 2012 மார்ச் 27 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன 126ஆவது சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் மாநாட்டின் 137ஆவது மனித உரிமைகள் தொடர்பிலான கூட்ட தொடரில் கலந்துகொள்வதற்காக உகண்டா விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மார்ச் 31ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி வரை உகண்டாவின் கம்பாலா நகரில் இக்கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் என்டர்ஸன் பீ ஜோன்ஸனின் அழைப்பிற்கிணங்கவே நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன இக்கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நாடாளுமன்ற சங்கத்தின் பொது செயலாளர் கலாநிதி வில்லியம் சிஜாவை ஏப்ரல் 09ஆம் திகதி சந்திப்பதற்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன லண்டனுக்கும்  விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இச்சந்திப்பு பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .