2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

விமான நிலையத்தில் இந்திய பயணிகள் மீது நடத்தப்படும் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும்: பிரபா கணேசன்

Super User   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலமாக இந்தியாவிலிருந்து வரும் சிறு வர்த்தகர்கள், உல்லாச பிரயாணிகள் மீது மட்டுமே குறிவைத்து இலங்கை சுங்க திணைக்களத்தினரால் நடாத்தப்படும் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

"இலங்கை சுங்க திணைக்களத்தினர், குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பிரயாணிகளிடம் கெடுபிடியாக நடந்து கொள்கின்றனர். ஒரு சில பொருட்களையும் கூட கொண்டு வருவதற்கு அனுமதிப்பதில்லை. சில தமிழ்நாட்டை சேர்ந்த உல்லாச பிரயாணிகள் தமது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எடுத்து வரும் பரிசு பொருட்களை கூட சுங்க திணைக்களத்தினர் தடுத்து நிறுத்துகின்றனர்.

இலங்கைக்குள் விமான நிலையம் மூலம் அதிகமாக கொண்டுவரும் பொருட்களுக்கு சுங்க தீர்வை அறவிடப்பட்டு பொருட்கள் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக சுங்கத் தீர்வை அறவிடப்படாமல் பொருட்களை சுங்கத்தினர் பறிமுதல் செய்வதாக என்னிடம் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக சுங்க திணைக்களத்தினரர் ஆர்.டீ.எப்  துறையை சேர்ந்த விமான நிலையத்திற்கு பொறுப்பான உதவி அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். சுங்கத் தீர்வுக்கு உள்ளடக்கப்பட்ட பொருட்களுக்கு வரி செலுத்தப்பட்டால் அவற்றை எடுத்துச் செல்ல முடியும் எனவும் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதே சமயம் கொண்டுவரும் பொருட்களை அவை வரி விதிப்புக்கு உள் வாங்க கூடிய பொருட்களாக இருந்தால் அவற்றை பறிமுதல் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். இது சம்பந்தமாக காலந்தாழ்த்தாமல் உடனடி தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் தெரிவித்தேன்.

இப்படியாக தமிழ் நாட்டிலிருந்து வரும் பிரயாணிகளிடம் சுங்க  சுங்கத்தினர் நடந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது ஜெனீவா மாநாட்டில் இங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமை தான் காரணம் என்று நினைக்கத் தோன்றுகிறதென பல இந்திய வம்சாவளி மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றார்கள்.

இப்படியான சந்தேகம் தமிழ் மக்களுக்கு வராதவகையில் அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தனிப்பட்ட சில சுங்க அதிகாரிகளினால் எடுக்கப்படும் இப்படியான நடவடிக்கைகளினால் அரசாங்கத்தின் மேல் தமிழ் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அரசாங்கம் அக்கறையாக இருக்க வேண்டும்".





  Comments - 0

  • சினோ கணேசன் Monday, 02 April 2012 04:18 AM

    அடுத்த தேர்தலில் தரம் மிக்க அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என நம்புவோம்.

    Reply : 0       0

    azzuhoor Monday, 02 April 2012 04:35 AM

    யார் யாருக்கு சொல்வது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X