2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

முஸ்லிம் மீடியா போரத்தினால் மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு

Super User   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பாடசாலை மாணவர்களுக்கான 40ஆவது ஊடக கருத்தரங்கு கொழும்பு – 10 அல் ஹைரியா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

21ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கொழும்பு மத்தியிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளின் பெண் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கின் இறுதியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் மஹ்பூப் உஸ் சமான் கலந்துகொண்டார்.

கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளரான புர்கான் பீ. இப்திகார் இதன்போது மீடியா போரத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினரும் புகைப்பட ஊடகவியலாளருமான லியாகத் அலிகானுக்கு புரவலர் ஹாசிம் உமரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கமெரா பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரால் பரிசளிப்பு விழாவின் போது கையளிக்கப்பட்டது.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .