2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வாதுவை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

Super User   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                              (சனத் டெஸ்மண்ட்)

வாதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கல்கிஸை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

இப்பொறுப்பதிகாரிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்த நபர் ஒருவர்  வாதுவை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது  மரணமடைந்தநிலையில்  நேற்று காணப்பட்டதையடுத்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு கான்ஸ்டபிள்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இம்மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.


  Comments - 0

  • riswan Tuesday, 17 April 2012 07:35 PM

    இடமாற்றம் இதற்கு தீர்வாகாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X