2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீதி அமைச்சர் ஹக்கீம் - கட்டார் நீதி அமைச்சர் சந்திப்பு

Super User   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அந்நாடடு நீதி அமைச்சர் அப்துல்லாஹ் அல் கனீமை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது, நீதிச் சீர்திருத்தங்கள், கட்டாரில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகள், இஸ்லாமிய ஷரிஆ சட்டம், பொருளாதாரம், முதலீடு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கட்டார் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்காக நன்றி தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் கட்டார் நீதி அமைச்சரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

அத்துடன், கட்டாரின் வக்பு மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி முபாரக் அல் ஹவாரியையும் அமைச்சருமான ஹக்கீம் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இச்சந்திப்புக்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜமீல், கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஜயந்த பலிபானே மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியின் பொது செயலாளர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X