2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க மே தின கூட்டத்தை எவரும் குழப்பக் கூடாது: சஜித்

Super User   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(யொஹான் பெரேரா)

எதிர்வரும் மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தினை எவரும் குழப்பக் கூடாது என அக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

"மே தின கூட்டத்தை குழப்பும் எத்தனம் மூன்றாம் தர செயற்பாடாகும். அது ஒரு அடிப்படை உரிமை மீறலுமாகும்" என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

எவருக்கும் நாட்டின் எந்த பகுதியிலும் கூட்டம் நடத்தும் உரிமை உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மே தினத்தன்று, தனது தந்தையான மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 19ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் பற்றி குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, சகல கட்சி அங்கத்தவர்களும் தமது முழு ஆதரவை இதற்கு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்திற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் தமது முழு ஆதரவை வழங்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார்.

பிரேமதாஸ நினைவு நிகழ்வுகள் இவ்வருடம் மதியத்தின் பின்னரே நடைபெறும். நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் கட்சி உறுப்பினர்கள் வர விரும்புவதால் போக்குவரத்து பிரச்சினையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என அவர் கூறினார்.

இந்த நினைவு தின கொண்டாட்டத்தில் ஊர்வலம் இடம்பெறுமா என கேட்டபோது, அவ்வாறு திட்டமிடப்படவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் விரும்பியவாறு வந்து சேரலாம் என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

"அவர்கள் நடந்து வரலாம் அல்லது மாட்டு வண்டியில் வரலாம் அல்லது வாகனங்களில் வரலாம். அது அவர்கள் விருப்பம்" என அவர் குறிப்பிட்டார்.

பிரதான ஞாபகார்த்த நிகழ்வு புதுக்கடையில் மே முதலாம் திகதி பகல் ஒரு மணிக்கு நடைபெறும்.. ஆனால் வணக்கஸ் தலங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி திட்டத்துடன் ஏப்ரல் 21ஆம் திகதி மறைந்த தனது தந்தையின் ஞாபகார்த்த நிகழ்வுகள் ஆரம்பிக்கும் என அவர் கூறினார்.

மேலும் வீடற்றவர்களுக்கு வீடமைத்து கொடுக்கும் கம்உதாவ (கிராம எழுச்சி) திட்டமும் ஆரம்பித்து வைக்கப்படும். மறைந்த தனது தந்தையின் கொள்கைக்கு உயிர் கொடுக்க எம்மால் இயன்றதெல்லாம் செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார். (படங்கள்: பிரதீப் பத்திரன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X