2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர் பதவிகளிலிருந்து மிலிந்த இராஜினாமா

Super User   / 2012 ஏப்ரல் 25 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                (யொஹான் பெரேரா)

கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகிய பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக மிலிந்த மொரகொட இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சிக் குழுக்கூட்டத்தில் அறிக்கையொன்றை விடுத்த மிலிந்த மொரகொட, சபை நடவடிக்கைகளில் தனது முழு அர்ப்பணிப்பை வழங்க முடியாதுள்ளதால் தான் ராஜினாமா செய்வதாக கூறினார்.

"சபையின் நடவடிக்கைளுக்கு நாம் எதிர்கட்சித் தலைவர் முழுமையான பங்களிப்பை வழங்குவதும், நாம் ஸ்தாபித்த அடிப்படைகள் தொடர்ந்தும் ஐக்கியமாகவும் உறுதியாகவும் இருப்தை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். இந்த பாத்திரத்தை பூர்த்தி செய்வதை எனது வேறு சில பொறுப்புகள் தடுக்கின்றன. இந்த காரணத்திற்காக, இந்த காரணத்துக்காக மாத்திரம், நாம் பதவி விலகுகிறேன்'" என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய சர்வதேச நிறுவனமொன்றில் தான் பதவியொன்றை பெறவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை எனவும் தான் தொடர்ந்தும் கொழும்பினதும் இம்மாபெரும் நாட்டின்   பிரஜைகளுக்கும் தொடர்ந்தும் சேவையாற்ற தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X