2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

காணிகளை பறிகொடுத்தவர்கள் மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான சட்டம் விரைவில்: நீதி அமைச்சர்

Super User   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை பறிகொடுத்தவர்கள் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற சட்டம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி மற்றும் அமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.  இச்சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் என நீதி அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நெருங்கிய நல்லுறவு நிலவி வருவதாகவும், அண்மையில் பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட போது அவுஸ்திரேலிய நீதி அமைச்சரை சந்தித்து, இரு நாடுகளின் நீதித்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பல் கலந்துரையாடிதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தும் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி இதன்போது கூறினார்.

யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேறும் மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் பங்களிப்புகளை செய்து வருவதாக உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

சிறையிலுள்ள தமிழ் சந்தேக நபர்கள் பற்றிய தூதுவரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், ஏறத்தாழ 12,000 பேரில் பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குற்றச்சாட்டுகள் உள்ள குறிப்பிட்ட சிலரின் விவகாரத்தில் விரைவில் உரிய தீர்வு காணப்படும் என கூறினார்.

நாட்டுக்கு நாடு சட்டவிரோதமாக மனிதர்களை கடத்தும் விவகாரத்தை முறியடிப்பதற்கு இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பற்றி அமைச்சரும் உயர் ஸதானிகரும் திருப்தி தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X