2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இன, மத பேதமின்றி சகலருக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியை அமைப்பேன்: சஜித்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

'இன, மத பேதங்களிலில்லாமல் நாட்டிலுள்ள சகலருக்கும் நன்மை அளிக்கும் விதத்;திலான ஆட்சியை எதிர்காலத்தில் நான் அமைப்பேன்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நீர்கொழும்பு, கட்டுவ பிரான்ஸிஸ் ஸாலிஸ் தேவாலய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச,

'யுத்தத்தின் பின்னர் எமது நாடு பாரிய அபிவிருத்தியை அடையக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதனை நாங்கள் இழந்திருக்கின்றோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 8.3 சதவீதம் என்று கூறப்படுகின்றது.

இது ஒவ்வொருவருக்கும் அவர்களது பொருளாதார நிலையையும் மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிடுகையில் புரிகிறதா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

எமது நாடு பாதாளத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. ஆட்சியில் உள்ளவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும், அடியாட்களுக்குமே நன்மை பயக்கும்; விதத்தில் ஆட்சி நடத்தப்படுகிறது.

நிலத்துடனும் கடலுடனும் போட்டியிட்டு வாழ்கை நடத்தக்கூடிய ஏழை மக்களுக்கு பொருளாதார அபிவிருத்திகளின் நன்மை போய்ச் சேர வேண்டும்.நாட்டிலுள்ள 2 கோடி மக்களுக்கும் நன்மை தரக்கூடிய விதத்தில் ஆட்சி நடத்தப்பட வேண்டும்.

எமது நாட்டின் தேசிய வருமானத்தில் 50 சதவீதத்தை 20 சதவீதமாக வசதி படைத்தவர்கள் அனுபவிக்கின்றனர். 4 சத வீதத்தையே ஏழை மக்கள் அனுபவிக்கின்றனர் என்று ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X