2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி வயோதிபர் மரணம்

Menaka Mookandi   / 2012 மே 07 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானையிலிருந்து அலுத்கம நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கரையோர ரயில் ஒன்றில் மோதி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.56க்கு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த விபத்துச் சம்பவத்தில், கொழும்பு 6ஐச் சேர்ந்த ரஞ்சன் விஜேரத்ன (வயது 65) என்ற முதியவரே உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X