2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

குடாப்பாடு பகுதியில் தென்னைகளை வெட்டி, சுற்றுமதிலை உடைத்த பிரதேசவாசிகள்; பொலிஸாரின் விசாரணை ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 மே 08 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு, குடாப்பாடு பிரதேச தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலோரப் பகுதியில் உள்ள தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ள பிரதேசவாசிகள், அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுமதிலையும் உடைத்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த நீர்கொழும்பு பொலிஸார், மரங்களை வெட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமொன்றைக் கைப்பற்றியதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் அதிகமாக பிரதேசவாசிகள், அப்பகுதியில் கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான கடலோரப் பகுதியில் சுமார் 50 மீற்றர் தூரத்தில் வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்றுமதிலும் அப்பகுதியில் இருந்த 10 இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களுமே வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.

கடலோரப் பகுதியில் சட்டவிரோத செயல்களை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் தமது பிள்ளைகள் விளையாடுவதற்கு வசதியாகவே மரங்களை வெட்டியதாகவும், சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுற்றுமதில் காரணமாக பிரதேச மக்கள் கடல் பகுதிக்கு செல்வதற்கு இடைஞ்சல் ஏற்பட்டதன் காரணமாக சுற்றுமதில் உடைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .