2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

டாக்டர் ஜயலத் ஜயவர்தன நாடு திரும்புகிறார்

Super User   / 2012 மே 15 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவிற்காக விஜயம் மேற்கொண்ட போது, திடீரென சுகயீனமுற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன சிகிச்சை பெற்று பூரண சுகம் பெற்றுள்ள நிலையில் எதிர்வரும் மே 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

லண்டன் மற்றும் பிரான்ஸின் 'மாசெய்' நகர வைத்தியசாலை ஆகியவற்றில் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜயவர்தன சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உகண்டாவில் நடைபெற்ற 126ஆவது சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு, இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று பொதுநலவாய நாடாளுமன்றச் சங்கத்தின் பொதுச் செயலாளரை சந்தித்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X