2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இலங்கை முஸ்லிம்களின் நலனுக்காக உதவுவேன்: சவூதி தூதுவர்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 07 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


இலங்கை முஸ்லிம்களின் நலனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கவுள்ளதாக இலக்கைக்கான முன்னாள் சவூதி அரேபியத் தூதுவரும், யெமன் நாட்டுக்கான சவூதி அரேபியாவின் தற்போதைய தூதுவருமான அலி அல் ஹம்தாத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கும், தூதுவர் அலி அல் ஹம்தாதுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி சந்திப்பிலேயே யெமன் நாட்டுக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் அலி அல் ஹம்தாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மக்களுடன் தனக்கு நல்ல தொடர்புகள் உள்ளதாகவும், இலங்கை மக்களை தான் மிகவும் நேசிப்பதாகவும் கூறினார்.

இந்தச் சந்திப்பில், கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் யெமன் நாட்டின் பிரபல வர்தகர் ஒருவரும் இடம்பெற்றிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X